2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அரசியலமைப்பு ஊடாக தமிழர்களுக்கு அரசியல் தீர்வு: லக்ஷ்மன்

Gavitha   / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு ஊடாக தமிழர்களுக்கான ஓர் அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு தமிழ் அரசியல் கட்சிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

அரசியல் தீர்வு ஒன்றுக்கான உடன்பாடு அடையப்பட்ட பின்னர் இந்த ஆலோசனைகள், அரசியலமைப்பு திருத்தத்தில் சேர்க்கப்பட்டு அங்கிகாரத்துக்காக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அவர் கூறினார்.

நாம் இதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாடாளுமன்றில் கோருவோம். பிரதானமான தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க தீர்மானித்தது என அமைச்சர் கூறினார்.

நாடாளுமன்றில் பெரும்பான்மை ஆதரவு இல்லாவிடின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது எந்த அரசாங்கத்துக்கும் கடினமாகவே இருக்கும் என அவர் கூறினார்.

யுத்தக் குற்றம் தொடர்பான சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கவும் பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து செயற்படுவது அவசியமாகின்றது.

இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றுமையாக இருந்தால், இந்த பிரச்சினைகளில் இரண்டு பிரதான கட்சிகளும் பொதுமக்களும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாக ஐ.நா.விடம் கூற முடியும். நாம் கூறுவதையும் அவர்கள் கேட்க வேண்டுமென நாம் ஐ.நா.வுக்கு கூற முடியும்.

முன்னர், ஓர் அரசாங்கம் தேசிய பிரச்சினையை தீர்க்க முன்வந்தால் அடுத்து வரவுள்ள அரசாங்கம் வேறு கருத்தைக் கொண்டிருக்கும். எனவே, அரசாங்கம் மாறினாலும் தேசிய பிரச்சினை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாத ஒரு கொள்கையை வகுக்க புதிய அரசாங்கம் விரும்புகின்றது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X