Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மன் மாதிரி என இலங்கையில் பிரபலமாக சொல்லப்படுகின்ற தேர்தல் முறைமை உள்ளடங்கலான புதிய அரசியலமைப்புத் திட்டம் ஒன்று தொடர்பிலான முதற்கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
இதன் மூலம் சிறுபான்மை சமூகங்களிடையே நீண்டகாலமாக நிலவும் மனக்குறையை தீர்க்கமுடியும் எனவும் பரந்தளவிலான பொருளாதாரதச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு உண்மையான சமவாய்ப்புள்ள சமூக பொருளாதார சந்தையை உருவாக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜேர்மனியின் வெளிவிகார அமைச்சர் பிராங்க்-வோல்டர் ஸ்டெய்மயருடன் உத்தியோகபூர்வ பேச்சுக்களை மேற்கொண்ட பின், நடாத்திய இணைந்த பத்திரிகையாளர் மாநாட்டிலேயே மங்கள சமரவீர இக்கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்போது தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தியில் ஜெர்மனியின் பங்களிப்பை கோடிட்டுக் காட்டிய மங்கள சமரவீர, கிளிநொச்சியில் அமைந்துள்ள ஜெர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தால் வட, கிழக்கு இளைய சமுதாயத்துக்கு நன்மை பயப்பதாக உள்ளதாக தெரிவித்தார். இதேவேளை முப்பது வருடங்களுக்கு முன் கட்டுப்பத்தையில் ஆரம்பிக்கப்பட்ட ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தால் தெற்கிலுள்ளவர்கள் பயன்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் பிரதான ஐந்தாவது ஏற்றுமதியாளராக ஜேர்மனி விளங்குவதாகவும், 5 வீதமான எமது ஏற்றுமதிகள் அங்கு செல்வதாகவும், கடந்த வருடம் 824 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஏற்றுமதியானதாகவும், தாங்கள் ஒரு பில்லியன் இலக்கை எதிர்வரும் வருடங்களில் கடக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago
3 hours ago