2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

30% ஊ.சே.நி கடன் மாகாணங்களுக்கு வருகிறது

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்புரிமையாளர்கின் கணக்கில் இருந்து நூற்றுக்கு 30 சதவீதத்தை கடனாக பெற்றக்கொள்ளும் வேலைத்திட்டம் மாகாண மட்டத்தில் விரிவுப்படுத்துமாறு தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் டப்ளியு. ஜே.செனவிரத்ன உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த செயற்பாடு, பிரதான காரியாலயத்தில் மட்டும் முன்னெடுக்கப்படுவதால், கடுமையாக தாமதமாகின்றது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கடன் பெற்றுக்கொள்வதற்கு 65 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ள போதிலும் 3,700 பேருக்கே கடன் வழங்கப்பட்டுள்ளது.

பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் காரியாலய இடவசதி போதாமை காரணமாக இவ்வாறு தீர்மானித்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X