2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்தவிடம் வாக்குமூலம் பெற்றமை விசேட சம்பவமாகும்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியொருவரை விசாரணைக்கு உட்படுத்தி வாக்குமூலம் பெற்றுக்கொண்ட முதலாவது தருணத்துக்கு மஹிந்த ராஜபக்ஷ முகங்கொடுத்தததாக பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பான விசாரணை குழுவின் செயலாளர் செயலாளர் லெசில் த சில்வா தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கு ஆணைக்குழுவின் அதிகாரிகளை அனுப்பி விசாரணைகளை முன்னெடுத்தமையானது, பாரிய இலஞ்ச ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு பெறும் விசேடமான வெற்றி என அவர் கூறியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, சுயாதீன தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக பிரசாரங்களை முன்னெடுக்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைவிட ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக விளம்பரங்கள் மூலம் பிரசாரத்தை முன்னெடுத்தமை மற்றும் அதற்கான உரிய பணத்தை செலுத்தத் தவறியமையால் அந்த அலைவரிசை கோடிக்கணக்கணக்கான ரூபாய் நட்டத்தை எதிர்நோக்கச் செய்தமை தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆணைக்குழுவின் அதிகாரிகள் விசாரித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X