Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 28 , பி.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடல்வழி ஆட்கடத்துவதற்;கு எதிரான அவுஸ்திரேலியாவின் கொள்கையில் மாற்றம் இல்லை என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபைன் மூடி அறிவித்துள்ளார்.
கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை கொண்டுவருவதற்;கு எதிரான அவுஸ்திரேலிய அரசாங்கத்தின்; கொள்கை தெளிவானது. அது மாறவில்லை அவுஸ்திரேலியாவுக்கு பாதை மூடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எல்லைகளை பாதுகாப்பதில் புதிய பிரதமர்; மல்கம் ரேண்புல் அரசாங்கம் உறுதியாக உள்ளது. எங்கிருந்து வந்தாலும் சட்டவிரோதமாக படகில் வருவோரை தொடர்ந்து அது தடுக்கும். அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக உள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக வரும் எவரும் தடுக்கப்பட்டு இலங்கைக்கு பாதுகாப்பாக திரும்பி அனுப்பப்படுவர் அல்லது பப்புவா நியுகினி அல்லது நவுறுவில் உள்ள விசாரணை மையங்களுக்கு அனுப்படுவர் என உயர்ஸ்தானிகர் மூடி கூறினார்.
சிரியா மற்றும் ஈராக் மோதலிலிருந்து தப்புவதற்கு புலம் பெயர்வோர் குடியமர்வு தொடர்பில் அண்மையில் அவுஸ்திரேலியா அறிவித்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மூடி இந்த அறிவித்தலுக்கும் சட்டவிரோதமன முறையில் படகில் வருவோரை அவுஸ்திரேலியா தடுப்பதற்குமிடையில் எந்த தொடர்பும் இல்லை. அவுஸ்திரேலியா ஐ.நா அகதிகள் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஜோர்தான், லெபனான் துருக்கி ஆகிய நாடு;களில் தற்போதுள்ள அகதிகளை மட்டும் மீளக்குடியமர்த்தும்.
படகு மூலம் சட்ட விரோதமாக வருபவர்கள், இவர்களை குடியர்த்தும் இடங்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அவர் கூறினார்.
'இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் உள்ள ஆட்கடத்தல் தொடர்பான ஒத்துழைப்பு இரண்டு நாடுகளினதும் நலனுக்கு பங்களிக்கின்றது. இதன் மூலம் பலரின் உயிர்கள் காக்கப்பட்டுள்ளன.'
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago