2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை நேரங்களில் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

Gavitha   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை நேரம் காலை 7.30 மணியிலிருந்து பிற்பகல் 1.30 மணிவரையிலான காலப்பகுதியில், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதை நிறுத்துவது தொடர்பில் அமைச்சு ஆலோசித்து வருவதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் மேலதிக வகுப்புக்களை முற்றாக நிறுத்துவதா அல்லது இந்த பிரச்சினைக்கு வேறு வழிகளில் தீர்வு காண முடியுமா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கல்வியமைச்சின் 2,000 மில்லியன் திட்டத்துக்குள், நாடளாவிய ரீதியில் காணப்படும் சுகாதார வசதிகளற்ற பாடசாலைகளுக்கு மலசலக்கூடங்களையும் மலவலக்குழி ஆகியவற்றை அமைத்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X