2025 மே 19, திங்கட்கிழமை

சம்பள விவகாரம்: இன்று பேச்சு இல்லை

Gavitha   / 2015 செப்டெம்பர் 28 , பி.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நாளை புதன்கிழமை(30) இராஜகிரியவிலுள்ள முதலாளிமார் சம்மேளனத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளதாக இலங்கை தொழிலாளர்  காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் நேற்று(28) தெரிவித்தார்.

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்துகொள்ளப்படும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான கூட்டொப்பந்த பேச்சுவார்த்தை, மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்தது.  

இந்நிலையில், சம்பள உயர்வு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் 24ஆம் திகதியும் இரண்டாவது பேச்சுவார்த்தை மே 18ஆம் திகதியும், மூன்றாவது பேச்சுவார்த்தை ஜூன் 22ஆம் திகதியும், நான்காம்கட்ட பேச்சுவார்த்தை ஜூலை 2ஆம் திகதியும் 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஜூலை 15ஆம்; திகதியும் நடைபெற்றது.

கடந்த ஜுன் 22 ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் தோட்டத் தொழிலாளர்கள் மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தை ஜுலை 6 ஆம் திகதிமுதல் இரண்டு வாரங்கள் முன்னெடுத்திருந்தனர்.

தொழிலாளார்களின் மெதுவாக பணிசெய்யும் போராட்டத்துக்கும் சேர்த்து உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகவும் போராட்டத்தை கைவிடுமாறும் இ.தொ.கா. கூறியமைக்கு அமைவாக தொழிலாளர் தமது போராட்டங்களை கைவிட்டனர்.

ஐந்து கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எவ்வித முடிவுகளும் எடுக்கப்படாததால்   இப்பேச்சுவார்த்தை நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.

பொதுத் தேர்தல் முடிந்து இன்றுடன் 43 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை இப்பேச்சை நடைபெறாமல் இழுபறி நிலையிலுள்ளது.

இது இவ்வாறிருக்க கூட்டொப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்துமாறு கோரி தோட்டத் தொழிலாளர்களும் பல்வேறு அமைப்புகளும் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்த பேச்சுவார்த்தை இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், கடந்த வியாழக்கிழமை (25) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X