Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரி.பாரூக் தாஜுதின்
தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரை நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யாமல், மேல் நீதிமன்றில் ஆஜர் செய்ததன் ஊடாக நீதிமன்ற செயன்முறை மீறப்பட்டுள்ளது என்று கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்ற செயன்முறை மீறப்பட்டமைக்கான காரணத்தை அறியத்தருமாறு நிதி குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இதற்கான காரணத்தை நிதி குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி, மேல்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் நவம்பர் 5ஆம் திகதியன்று காட்ட வேண்டுமென நீதவான் உத்தரவிட்டார்.
அரசியலமைப்பு, பொதுச்சொத்து சட்டம் ஆகியவற்றின் ஏற்பாடுகளை நிதி குற்றப்புலனாய்வு பிரிவு மீறியுள்ளதாகக் கூறிய நீதவான், வெளிநாடு செல்ல அனுஷ பெல்பிட்டவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு மறுத்துள்ளார்.
சட்டப்படி இவர்கள், நீதவான் ஒருவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருக்க வேண்டும். 25,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகை மோசடி செய்யப்பட்டால் சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும்.
ஆனால், நிதி குற்றப்புலனாய்வு பிரிவு இதை மீறி, சந்தேகநபர்களை மேல்நீதிமன்றில் ஆஜர்செய்து அவர்களை பிணையில் எடுத்துள்ளனர்.
எனினும், பெல்பிட்டவை வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு நீதவான் நீதிமன்றத்தில் கேட்கின்றனர் என நீதவான் நிஷாந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
44 minute ago
59 minute ago