Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 11 , பி.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத்தினால் அனுமதியளிக்கப்பட்டுள்ள நான்கு சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு 10 பேர்கொண்ட அரசியல் சபை பேரவையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பெயர் விவரங்கள் அடங்கிய ஆவணம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அந்த பெயர்களுக்கான அனுமதியை ஜனாதிபதி, நாளை செவ்வாய்க்கிழமை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
முழுமையான அதிகாரங்களுடன் கூடிய, இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளது. ஓய்வு பெற்ற நீதியரசர் பி.பீ. வீரசூரிய அந்த ஆணைக்குழுவுக்கு தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது. தலைவர் உள்ளிட்ட மூவர் இக்குழுவில் அங்கம் வகிப்பர்.
இந்த ஆணைக்குழுவுக்கு விசாரணைகளை மேற்கொண்டு வழக்குத் தாக்கல் செய்வதற்கான அதிகாரங்கள், ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் திருத்தத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, ஓய்வு பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி டி சில்வாவும் சந்தேகத்துக்கிடமான ஆவணங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக பீ.ஏ. மானதுங்கவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த ஆணைக்குழுவில் தலைவர் உட்பட ஏழு பேர் அங்கம் வகிப்பர்.
பொலிஸ் ஆணைக்குழுவின் பிரதானியாக ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் குணசேன தேனபது நியமிக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.
அரச சேவை ஆணைக்குழுவின் தலைவராக பொதுநிர்வாக உள்ளாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் பீ. திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளார். இந்த ஆணைக் குழுவில் தலைவர் உள்ளிட்ட 9பேர் அங்கம் வகிப்பர்.
இதேவேளை, மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தலைவர் உள்ளிட்ட ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு அமைவாக, சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் அரசியலமைப்பு பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 11 ஆணைக்குழுக்கள் புதிதாக நியமிக்கப்படகூடும் என்று அறியமுடிகின்றது.
அதுமட்டுமன்றி, இந்த ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களாக நியமிப்பதற்காக 465 பேரின் பெயர் விவரங்கள், பேரவைக்கு கிடைத்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
40 minute ago