2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சு.க.வுக்கு மஹிந்தவே தலைமைதாங்க வேண்டும்

Gavitha   / 2016 ஜனவரி 20 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரசாரத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமைத்தாங்க வேண்டும் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

'ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளமையால் நான் அவரை ஏற்றுக்கொள்வேன். எனினும, ராஜபக்ஷவுடனேயே மக்கள் உள்ளனர்' என்று அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், ராஜபக்ஷவே பிரசாரங்களுக்கு தலைமைத்தாங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த வேண்டுகோளை கட்சி ஏற்றுக்கொள்ளாவிடில், தான் கடினமாக ஒரு அரசியல் தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கூட்டமைப்பின் உருவாக்கத்துடன் ராஜபக்ஷவின் பிரசாரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. எனினும், புதியதொரு கூட்டமைப்பு உருவாகவுள்ளதை, முன்னாள் ஜனாதிபதி நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X