2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

அரசியல் கட்சிகளின் வரவு - செலவுகளை ஜன. 29க்கு முன் சமர்ப்பிக்க உத்தரவு

Gavitha   / 2016 ஜனவரி 24 , பி.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகல அரசியல் கட்சிகளினதும் வருடாந்த வருமானம் மற்றும் செலவுகள் தொடர்பான அறிக்கைகளை இம்மாதம் 29ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது தொடர்பில் சகல கட்சிகளுக்கும் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய, 2015ஆம் ஆண்டின் அனைத்து வருமானம் மற்றும் செலவுகள் குறித்த அறிக்கையை தேர்தல்கள் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

அத்துடன், அரசியல் கட்சிகள் பெற்ற வருமானம் மற்றும் அவை எவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்டன என்பது தொடர்பில் அந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X