Freelancer / 2021 டிசெம்பர் 18 , பி.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த வருட தொடக்கத்தில் கொரோனாவின் 3ஆவது அலை இந்தியாவில் ஏற்பட கூடும் என்றும் தற்போது நோயெதிர்ப்பு சக்தி அதிகளவில் மக்களிடம் உள்ளதால், 2ஆவது அலையை விட இந்த அலை லேசாகவே பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தேசிய கொரோனா சூப்பர்மாடல் குழுவின் தலைவர் வித்யாசாகர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் 3ஆவது அலை நிச்சயம் ஏற்படும். நாளொன்றுக்கு 7,500 கொரோனா தொற்றாளர்கள் தற்போது உறுதி செய்யப்பட்டு வருவதுடன், டெல்டாவுக்கு பதிலாக ஒமிக்ரான் அந்த இடத்துக்கு வரும்போது, இந்த எண்ணிக்கை உயர போவது உறுதி என்றார்
இந்தியாவில், கொரோனா பாதிப்புகள் கடந்த வருடம் கண்டறியப்பட்டாலும், நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிக உச்சம் தொட்டது.
இதற்கு டெல்டா வகை கொரோனா காரணம் என கூறப்பட்டது. இதனால், 2ஆவது அலை நாட்டில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது.
அதன்பின்னர் டெல்டா பிளஸ் உள்ளிட்ட கொரோனா வகைகள் கண்டறியப்பட்டாலும் பெரும் தாக்கம் எதுவும் ஏற்படுத்தவில்லை.
சமீப நாட்களாக நாடு முழுவதும் பாதிப்புகள் குறைந்து வருகின்ற நிலையிலேயே 3ஆவது அலை சாத்தியம் என நிபுணர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
50 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
50 minute ago
50 minute ago
2 hours ago