Freelancer / 2026 ஜனவரி 01 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
2026 புத்தாண்டு நமது தாய்நாட்டிற்கு சவாலான ஆண்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதை நன்கு அடையாளம் கண்டு, உணர்ச்சிகளுக்கு அல்லாமல், அறிவுக்கு இடமளித்து செயல்படுவதற்கு நாம் அனைவரும் இன்றே உறுதிபூணுதல் வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்பாராத நெருக்கடி நிலைமையின் பின்னணியில் நாம் எதிர்கொண்ட பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்கள் புதிய பரிமாணத்திற்கு விரிவடைந்துள்ளன. இந்த சவால்களை வெல்வதற்கு வெறும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் அல்லது திட்டங்கள் மூலம் முகங்கொடுப்பது கடினமாகும். எனவே ஒத்துழைப்பு இந்த தருணத்தில் சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் வேறு எந்த காலத்தைவிடவும் முக்கியமான அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஏமாற்றம் மற்றும் உதவியற்ற நிலையால் துன்புறுவதால் எதையும் செய்யாமல் இருப்பதன் மூலம் நிலைமை சிறந்த திசையில் மாறாது. மாற்றத்திற்குச் செய்ய வேண்டியது அனைவரும் எல்லோருக்காகவும் ஒன்றிணைந்து செயல்படுவதே. எனவே உடன்பட முடிந்த இடத்தில் உடன்படவும், உடன்பாட்டில் செயல்படவும் நாம் பணிவுடன் இருக்க வேண்டும்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியது போல், உண்மை மற்றும் நீதி தொடர்பான விடயங்களில் பெரிய மற்றும் சிறிய பிரச்சினைகளுக்கு இடையே வேறுபாடுகள் இல்லை. ஏனெனில் மனிதர்களை நடத்துவது தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை.
இந்த சவாலான ஆண்டில் நமது சகோதர மக்கள் எதிர்கொண்டுள்ள ஒவ்வொரு பிரச்சினையையும் ஒரே மாதிரியாக கருதி தீர்வுகளை கண்டறிவதற்காக நாம் செயல்பட வேண்டும். அத்தகைய தொலைநோக்குப் பார்வை மற்றும் முன்னோக்குச் சிந்தனையுடன் செயல்பட அனைத்து மத தலைவர்கள், அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் நாட்டின் முழு மக்களுக்கும் தைரியமும் சக்தியும் கிடைக்கும் புத்தாண்டிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். (a)
10 minute ago
11 minute ago
42 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
42 minute ago
48 minute ago