2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

30/1 தீர்மானத்திலிருந்து விலகுகிறது இலங்கை?

Editorial   / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராஜதந்திர சமர்க்களம் என வர்ணிக்கப்படும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத் தொடர், சுவிட்சர்லாந்தின் தலைநகரான ஜெனீவாவில், இன்று (25) ஆரம்பமாகவுள்ளது.  

இந்நிலையில், இலங்கையில் பொறுப்புக்கூறலை ஏற்படுத்துவதற்காக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்துக்கான இணை அனுசரணைப் பொறுப்பிலிருந்து விலகுவது தொடர்பில், இலங்கை ஆராய்ந்து வருகிறது. 

இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், இலங்கையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு, இலங்கை சம்மதித்திருந்தது. ஆனால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் பின்னர் மேலதிகக் காலக்கெடு வழங்கப்பட்ட பின்னரும், பொறுப்புக்கூறல் தொடர்பில் போதிய முன்னேற்றங்களை இலங்கை வெளிப்படுத்தவில்லை என்ற பரவலான குற்றச்சாட்டுக் காணப்படுகிறது. 

இந்நிலையில், தமிழ்மிரரின் சகோதரப் பத்திரிகையான சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலொன்றில் கருத்துத் தெரிவித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இணை அனுசரணையிலிருந்து விலக வேண்டுமெனத் தான் நினைப்பதாகத் தெரிவித்ததோடு, இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் வெளிப்படுத்தியிருந்தார்.  

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இன்று ஆரம்பிக்கின்ற நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை, எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இணை அனுசரணை முடிவிலிருந்து இலங்கை வெளியேறுமாக இருந்தால், முக்கியமான மாற்றமாக அது அமையும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .