2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

300 மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Simrith   / 2023 ஜூன் 12 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று  (11) வவுனியா கோவில்குளம் சந்திக்கு அருகில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​விற்பனைக்காக கொண்டு சென்ற  300  ப்ரீகபலின் மாத்திரைகளுடன் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல்கள் பண்டுகாபய நிறுவனம், மதுகந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட இந்த விசேட நடவடிக்கையில், வவுனியா கோவில்குளம் சந்திக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை அவதானித்து சோதனையிட்டனர். அங்கு, குறித்த நபர் விற்பனைக்காக எடுத்துச் சென்ற முந்நூறு (300) பிரேகபலின் மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்  வவுனியா பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர் கைப்பற்றப்பட்ட  மாத்திரைகளுடன் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .