Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
R.Tharaniya / 2025 மே 14 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
நீர்கொழும்பு- வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (13) இடம் பெற்றதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு இளைஞர்களும் ஒன்றாக இணைந்து கடலில் நீராடிக் கொண்டிருந்த போது கடலலையில் அள்ளுண்டு சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து வென்னப்புவ பொலிஸார், கடற்படையினரின் உதவியோடு நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்களாக மீட்கப்பட்ட மூவர் பொகவந்தலாவ சென் விஜயன்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் மற்றுமொரு நபர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர்.
உதயகுமார் ஸ்ரீதரன் (வயது 17), ஸ்ரீகாந்த் சரண் ராஜ் (வயது 19), ஸ்ரீகாந்த் அஜித் குமார் (வயது 18) மற்றும் யூசுப் (வயது 27) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன.
சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் ஸ்ரீகாந்த் சரண் ராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் அஜித் குமார் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் எனவும் உதயகுமார் ஸ்ரீதரன் உறவினர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த நால்வரில் இருவரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. ஏனைய இருவரின் சடலங்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ். சதீஷ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago