Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 12, வியாழக்கிழமை
Freelancer / 2022 மே 04 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
குறுகிய அரசியல் நலன்களுக்காக மக்களை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் நோக்கத்தில் எதிர்வரும் 6 ஆம் திகதி முன்னெடுக்க உத்தேசித்துள்ள வேலை நிறுத்தத்திற்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப் போவதில்லையென, பல அத்தியாவசிய சேவை வழங்குனர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
தமது சேவையை தொடர்ந்து வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
உத்தேச வேலைநிறுத்தமானது, தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அல்லவென்றும், பல அரசியல் கட்சிகளின் நலனுக்காகவே மேற்கொள்ளப்படவுள்ளதெனவும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago