Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 09 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு, நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழு தீர்மானித்துள்ளது.
நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழு கூட்டத்திலேயே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
இதற்கமைய, 52 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படமாட்டாததெனவும் அவர்களுக்கான தண்டனை தொடர்பில் விரைவில் தீர்மானிக்கவுள்ளதாகவும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றில் ஏற்பட்ட மோதல் நிலை தொடர்பில் விசாரணை செய்த குழுவின் அறிக்கை, 22ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
அந்த அறிக்கைக்கு அமையவே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணவீர, ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, பத்ம உதயசாந்த ஆகியோருக்கு எதிராக பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் நாடாளுமன்றத்தினுள் மிளகாய் தூள் தூவியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியின் ரஞ்சன் ராமநாயக்க, பாலித்த தெவரப்பெரும ஆகியோருக்கு எதிராக நாடாளுமன்றத்துக்குள் கத்தி ஒன்றை கொண்டு வந்தமை தொடர்பில் வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சபாநாயகரின் மேசை மீது உள்ள ஒலிவாங்கியை உடைத்து சேதமாக்கியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆனந்த அளுத்கமகே, திலும் அமுனுகம ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago