2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

7 விபத்துகளில் 3 வயது சிறுமி உட்பட ஏழு பேர் பலி

Editorial   / 2025 செப்டெம்பர் 17 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல்வேறு பகுதிகளில், செவ்வாய்க்கிழமை (16) ஆங்காங்கே இடம்பெற்ற  ஏழு வீதி விபத்துகளில் 3 வயது சிறுமி உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

முருங்கன்:

முருங்கன் சிலாவத்துறை வீதியில் உள்ள நிலமடு வளைவில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் முருங்கன் பகுதியைச் சேர்ந்த 33 வயது நபர் உயிரிழந்துள்ளார்.

எம்பிலிப்பிட்டிய

எம்பிலிப்பிட்டிய நகருக்கு அருகில் ஒரு வேன், முன்னால் சென்ற சைக்கிள் மீது மோதி விபத்துக்கு உள்ளானதில், லியனகம பகுதியைச் சேர்ந்த 36 வயது நபர் உயிரிழந்துள்ளார். வேன் ஓட்டுநர் வேனுடன் தப்பிச் செல்லும்போது மீண்டும் ஒரு முச்சக்கர வண்டியில் மோதியுள்ளார். அந்த விபத்தில் இருந்து தப்பிக்க முயன்றபோது, ​​உள்ளூர்வாசிகள் சந்தேக நபரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

நொச்சியாகம

நொச்சியாகம பகுதியில் உள்ள குக்குல்கட்டுவ வீதியில்யில் லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்கு உள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 60 வயது நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பேலியகொடை

பேலியகொட-கொழும்பு கண்டி வழுதியில்யில் பேலியகொட ரோஹண விஹாராக்கு அருகில் உள்ள பாதசாரிகள் கடவைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மற்றும் வான் மோதி விபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதில், முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த 3 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு குழந்தை, அவர்களின் தாய், முச்சக்கர வண்டி ஓட்டுநர் மற்றும் முச்சக்கர வண்டியில் சென்ற மற்றொரு நபரும் விபத்தில் காயமடைந்தனர்.

கந்தர

கந்தர-மாத்தறை திக்வெல்ல சாலையில் கண்டகொடெல்ல சந்திப்பில் மோட்டார் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த 63 வயதுடைய தெவிநுவர பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பேராதனை

பேராதனை - ரிகில்லகஸ்கட பேராதனை சாலையில் பேருந்தில் பயணித்த ஒருவர் அதிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். ஹிண்டகல பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பன்னல

பன்னல - பன்னல கிரியுல்ல சாலையில் உள்ள கொங்காஸ் சந்திப்பில் பயணிகளை இறக்கி மீண்டும் பயணத்தை தொடங்க முயன்றபோது, ​​பேருந்தில் ஏறுவதற்காக பேருந்தின் முன் வந்த 80 வயது மூதாட்டி ஒருவர் பேருந்தில் நசுங்கி உயிரிழந்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X