2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

“724 அபாயகரமான வீதி விபத்துகள்”

S.Renuka   / 2025 ஏப்ரல் 22 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

2025 ஆம் ஆண்டில் இதுவரை, 724 அபாயகரமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும், இதன் விளைவாக 764 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த 2024ஆம் ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதி முதல் இன்று வரை கொழும்பில் சிசிரிவி காட்சிகள் மூலம் போக்குவரத்து சட்டங்களை மீறிய சுமார் 4,048 வாகன ஓட்டிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஓட்டுநர்களின் வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், உரிமையை மாற்றத் தவறிய 241 வாகன உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X