2025 நவம்பர் 13, வியாழக்கிழமை

8 வயது சிறுமி துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு கடூழிய சிறை

Editorial   / 2025 நவம்பர் 13 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

     ரொசேரியன் லெம்பேட் 

மன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், பிரதிவாதியை  குற்றவாளியாக இனங்காணப்பட்டு, அவருக்கு 8 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தக் குற்றம், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பான வழக்கு விசாரணை, மன்னார்   மேல் நீதிமன்ற நீதிபதி  . எம். மிஹால்   முன்னிலையில் புதன்கிழமை (12) அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கின் நீண்ட விசாரணைகளின் பின்னர், பிரதிவாதியை குற்றவாளியாக இனங்காணப்பட்டார். பிரதிவாதி தரப்பின் சார்பாக சட்டத்தரணி   தினேஷன்  ஆஜராகியிருந்தார்.

வழக்குத்தொடருநர் தரப்பிற்காக, அரச சட்டவாதி   ஆறுமுகம் தனுஷன்   ஆஜராகி, வழக்கினை நெறிப்படுத்தினார்.

தண்டனை குறித்த தனது சமர் பணத்தில், அரச சட்டவாதி  . தனுஷன்  , "இக் குற்றத்தின் பாரதூரமான தன்மையையும், சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும்"கடுமையாக வலியுறுத்தினார்.  மேலும், "எதிர்காலத்தில் இவ்வாறான கொடூரமான குற்றங்கள் மீண்டும் இடம் பெறாமல் தடுக்கும் பொருட்டு, குற்றவாளிக்கு அதியுச்ச  தண்டனை வழங்க வேண்டும்" எனவும், "கொடூரமான இந்த செயலால் பாதிக்கப்பட்டசிறுமிக்கு உரிய நட்ட ஈட்டை பெற்றுத் தருமாறும்" நீதிமன்றத்திடம்  அவர் கோரினார்.

அரச சட்டவாதி யின் சமர்ப்பணத்தை ஏற்றுக்கொண்ட  நீதிபதி  , குற்றவாளிக்கு8 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அத்துடன், பாதிக்கப்பட்டசிறுமிக்கு நஷ்ட ஈடாக 200,000/- ரூபாய் (இரண்டு லட்சம் ரூபாய்) நட்டஈடு செலுத்துமாறும் குற்றவாளிக்கு கட்டளையிட்டுநீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X