2026 ஜனவரி 17, சனிக்கிழமை

9 ’ஏ’ பெற்ற சிறுவனை எரித்த நபர் சிக்கினார்

Freelancer   / 2022 நவம்பர் 29 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்தி பெற்ற 17 வயதுச் சிறுவனை எரித்த 28 வயது இளைஞன், அம்பிட்டியவில் விசேட பொலிஸ் குழுவினால் இன்று (29) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற சாதாரண தரப் பரீட்சையிலேயே குறித்த சிறுவன் 9 ஏ சித்தி
பெற்றுள்ளார்.

சந்தேகநபர் குற்றக் கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர் எனவும், கைது செய்யப்படும் போது அவரிடம் கைக்குண்டு ஒன்று இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பிட்டிய, மீகனுவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாதிக்கப்பட்ட சிறுவன், சனிக்கிழமை இரவு தனது குடும்ப உறுப்பினர்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.

கையில் தீப் பந்தத்தையும், மண்ணெண்ணெய் போத்தலையும் ஏந்திய சந்தேக நபர், சிறுவனுக்கு தீவைத்துள்ளார்.

17 வயது சிறுவனின் கைகள் மற்றும் கழுத்தில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கண்டி பொலிஸாரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் குற்றப் பின்னணி கொண்டவர் எனவும் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X