2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

9 மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல்

Editorial   / 2018 டிசெம்பர் 22 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

9 மாகாணங்களுக்கும், எந்தவொர காலதாமதமும் இன்றி, ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் என, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அவர், நேற்று (21) தனது கடமைகளை, உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்ற பின்னரே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

தேர்தல்களில் வெற்றிக்கொள்வதை நோக்காகக் கொண்டு, பொதுமக்களின் சொத்துகளை, துஷ்பிரயோகம் செய்து, ஒவ்வொரு மாகாணத்துக்கு ஒவ்வொரு நாள்களில் தேர்தல் நடத்தப்பட்டு வந்ததாக குற்றஞ்சாட்டிய அவர், இம்முறை, இக்கலாசாரம் மாற்றப்பட்டே தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறினார்.

அனைத்து மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் அதேவேளை, அரசாங்கத்தால் முடிந்தால், ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலை​யும் அதே நாளிலேயே, வைக்கலாம் என்றும் ஏனென்றால், இந்த நடவடிக்கை காரணமாக, பாரிய அளவிலான நிதியை சேமிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.​


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .