2025 ஜூலை 19, சனிக்கிழமை

A/L சித்தியடையாத மாணவர்களுக்காக புதிய திட்டம்

Janu   / 2025 ஏப்ரல் 28 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையாக பரீட்சை எழுதத் தயாராகி வருவதாகவும், சில மாணவர்களுக்கு அடுத்து  என்ன செய்வது என்பது குறித்து எந்த நோக்கமும்    இல்லை என்றாலும், தற்போதைய அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களுக்கும் முறையான வழிகாட்டுதலுடன் கூடிய ஒரு திட்டம் 2026 இல் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

 அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ, ஹூங்கம மற்றும் தங்காலை பகுதிகளில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

 மேலும் எழுபத்தைந்து ஆண்டுகளாக ஊழல் மற்றும் குற்றங்களுக்கு இருந்த அரசியல் பாதுகாப்பை தற்போதைய அரசாங்கம் நீக்கியுள்ளதாக கூறிய பிரதமர்  அந்த மக்கள் விரோத ஊழல் மற்றும் குற்றங்களுக்கு பாதுகாப்பு இல்லாததால்,  பயந்து குழப்பமடைந்த அரச மற்றும் பாதுகாப்பு சேவையில் உள்ளவர்கள், அரசியல் ஆசீர்வாதத்துடன் இவை அனைத்தையும் தொடர்ந்ததாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X