2026 ஜனவரி 27, செவ்வாய்க்கிழமை

FCID-இல் முன்னிலையாக முடியாது : ஷிரந்தி

Freelancer   / 2026 ஜனவரி 27 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் திணைக்களத்தின் கீழ் இயங்கும் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று முன்னிலையாக முடியாது என ஷிரந்தி ராஜபக்ஷ அறிவித்துள்ளார். 

தனிப்பட்ட காரணங்களினால் இன்றைய தினம் முன்னிலையாகாத நிலையில், இரண்டு வார கால அவகாசத்தைக் கோரியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் 'சிரிலிய' எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட கணக்கின் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ள இன்றைய தினம் காலை 9 மணிக்கு பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு வருகை தருமாறு ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X