Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு துறைமுகத்திற்கு சனிக்கிழமை (16) அன்று வருகைதந்த USS SANTA BARBARA (LCS) என்ற அமெரிக்க கடற்படையின் போர் கப்பலை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பார்வையிட்டார்.
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவும் இதன் போது கலந்துக்கொண்டனர்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்னல் மேத்யூ ஹவுஸ் ஆகியோர் அதிதிகளை வரவேற்றனர்.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளை பிரதிபலிக்கிறது.
இலங்கை மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்களில் ஒத்துழைப்புக்கான எதிர்கால வழிகளை ஆராய இந்த விஜயம் உதவியாக அமைந்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, USS SANTA BARBARAவின் கட்டளை அதிகாரி கொமாண்டர் அடம் ஜே ஒச்ஸ் (Commander Adam J Ochs,)கப்பலின் திறன்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் குறித்த விரிவான விளக்கத்தை அவர்களுக்கு வழங்கினார்.
இந்த விஜயம், USS SANTA BABARAவின் கொழும்பு துறைமுகத்திற்கான முதல் பயணத்தைக் குறிக்கிறது, இது அமெரிக்க-இலங்கை கூட்டாண்மையின் வலிமையையும், பாதுகாப்பான, வளமான மற்றும் சுதந்திரமான இந்து -பசுபிக் சமுத்திரத்திற்கானபகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
4 minute ago
50 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
50 minute ago
59 minute ago