2021 ஜூன் 16, புதன்கிழமை

ஆசிரியர் நியமனத்தை துரிதப்படுத்துமாறு கோரிக்கை

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்                    

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்துக்கும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப்புக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுத் திங்கட்கிழமை (1) மாலை நாடாளுமன்ற உறுப்பினரின் கிண்ணியா அலுவலகத்தில் நடைபெற்றதாக கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.எஸ்.அனீஸ் தெரிவித்தார்.      

கிழக்கு மாகாணத்தின் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படாது காலம் தாழ்த்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் மத்திய அரசின் கல்வியமைச்சரோடு கலந்துரையாடி நியமனத்தை துரிதப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில்  தொண்டர் ஆசிரியர்களாக அறுநூறுக்கும் மேற்பட்டோர் எவ்வித கொடுப்பனவுகளுமின்றி செயலாற்றி வருவதாகவும் அவ்வசிரியர்களின் நலன் கருதி நாடாளுமன்றத்தில் பிரேரணை முன்வைத்து உரையாற்றுமாறு கோரியதோடு நாடாளுமன்ற உறுப்பினரிடம் அதற்கான ஆவணங்களை கையளித்துள்ளதாகவும் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.                

இச்சந்திப்பின் போது அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி பத்து பேர் கலந்து கொண்டனர்.

இதற்கு பதிலளித்த, நாடாளுமன்ற உறுப்பினர், நியமனம் வழங்குவதை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .