2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

கட்டணம் செலுத்தாதோரின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Yuganthini   / 2017 மே 21 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மாவட்டத்தில்,  2 மாதங்களுக்கு மேல் நீர் கட்டணம் செலுத்தாதோரின் குடிநீர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்குள் கட்டணம்  1,000  ரூபாய்க்கு மேல் நிலுவையில் வைத்திருப்போருக்கே  இந்தத் துண்டிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய,  22ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே,  முன்கூட்டியே கட்டணத்தை செலுத்தி இத்துண்டிப்பு நடவடிக்கையை தவிர்த்துகொள்ளுமாறு  வடிகாலமைப்பு சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .