Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா, கதிரவன்
கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவர் ஜோன் மஹ ஷூக்குமிடையிலான சந்திப்பு, கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (01) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.
சுமார் இரண்டு மணி நேரங்கள் இடம்பெற்ற இச்சந்திப்பில், இருநாட்டு ஒத்துழைப்புடன் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சுற்றுலாத்துறை அபிவிருத்தி சம்பந்தமாக இங்கு பிரஸ்தாபிக்கப்ட்டது.
பிரான்ஸ் தேசத்தில் உள்ள மிகப் பெரிய உல்லாச விடுதி போன்று இலங்கையிலும் குறிப்பாக திருகோணமலையிலும் நிறுவுவதற்கு தயாராக இருப்பதாக உயர்தானிகரால் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆட்சியின் போது, 100 மில்லியன் யூரோ பெறுமதியில் கிழக்கு மாகாணத்தில் பாலங்கள். பெருந்தெருக்கள் நிறுவப்பட்டமையையும் உயர்ஸ்தானிகர் நினைவுகூர்ந்தார்.
இவ்வருடம், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கித்துள பிரதேசத்தில் உள்ள முந்தன் ஏரி ஆற்றினை அபிவிரத்தி செய்து சுமார் 350 ஏக்கர் விளைநிலங்களுக்கு நீர் பாச்சும் Nலைத்திட்டம் முன்னெடுக்க நிதி உதவி வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இத்திட்டம் முறையாக செயற்படுத்தப்படும் பட்சத்தில் சித்தாண்டி பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் எதிர்காலத்தில் தவிர்க்கப்படும். முதல் அமைச்சர் உயர்ஸ்தானிகருக்கு நினைவு பரிசு ஒன்றினைவும் வழங்கி வைத்தார்
8 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago