2021 ஜூன் 14, திங்கட்கிழமை

மூதூரில் குடிநீருக்குத் தட்டுப்பாடு

Suganthini Ratnam   / 2017 ஜூன் 11 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

 

தற்போது நிலவும் வரட்சி காரணமாக, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சுமார் 35 கிராமங்களில், கடந்த 3 நாட்களாக குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது என, அக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள், இன்று தெரிவித்தனர்.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மூதூர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு நீர் கொண்டுவரப்படும் மகாவலி ஆற்றின் நீலாப்பொல கங்கை ஆற்று நீரூந்தில், நீர் வற்றியுள்ளதாலேயே, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருகோணமலை மாவட்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கடந்த மூன்று நாட்களாக எந்தவித முன் அறிவித்தலுமின்றி குடிநீர் விநியோகிக்கப்படாமையால், மேற்படி கிராமங்களைச் சேர்ந்த மக்கள்  சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

மேற்படி கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை உத்தியோகத்தர்கள், நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அவர் கூறினார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .