2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

மரப்பொந்துக்குள் கேரள கஞ்சா: ஒருவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்போபுர பகுதியிலுள்ள வீட்டின் பின் புறத்திலுள்ள மரப்பொந்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைதான, 22  வயதுடைய நபரை,  எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதவான் சானிக்கா பெரேரா, ஞாயிற்றுக்கிழமை (11) உத்தரவிட்டார். 

குறித்தநபர், கேரளா கஞ்சா பயன்படுத்துவதாகவும் கேரளா கஞ்சா வைத்திருப்பதாகவும் பொலிஸாருக்குக் கிடைத்த  தகவலின் அடிப்படையில், சனிக்கிழமை (10) மாலை அவரது வீட்டைச் சோதனை செய்த போது, 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கந்தளாய் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில், ஞாயிற்றுக்கிழமை (11) ஆஜர்படுத்திய போதே, மேற்கண்டவாறு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .