2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

இடைநிறுத்தப்பட்ட நகரசபைத் தலைவரை வாசஸ்தலத்திலிருந்து வெளியேற்றக் கோரிக்கை

Super User   / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ். குமார்)

பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட திருகோணமலை நகரசபைத் தலைவர் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென அச்சபையின் உறுப்பினர் சி.கரிகாலன் கோரியுள்ளார்.

'திருகோணமலை நகர சபை தலைவர் ச.கௌரிமுகுந்தன் கடந்த 12ஆம் திகதி தொடக்கம் தலைமை பதவியில் இருந்து கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் விசாரணை ஒன்றுக்காக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது ஒரு சாதாரண உறுப்பினர். அவ்வாறிருக்கும் போது அவர் தொடர்ந்தும் நகர சபை தலைவர் வாசஸ்தலத்தில் குடியிருக்க முடியாது. அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும்' என அவர் நகரசபையில் இன்று முன்வைத்த தீர்மானத்தில் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை நகர சபையின் 59ஆவது கூட்டத் தொடர் இன்று வெள்ளிக்கிழமை  நடைபெற்றபோதே இத்தீர்மானத்தை அவர் முன்வைத்தார்.

நகர சபையின் உப தலைவர் க.செல்வராஜா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி, பதில் தலைவராக தான் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் 10 உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர்.

தலைவர் பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட ச.கௌரிமுகுந்தன் கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை. தான் கலந்து  கொள்ள முடியாமைக்கான காரணத்தை குறிப்பிட்டு தந்தி ஒன்றினை சபைக்கு அவர் அனுப்பி வைத்திருந்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .