Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 30 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை நகரசபை சுகாதார தொழிலாளர்கள் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளவிருந்த அடையாள வேலை நிறுத்தம், கைவிடப்பட்டு தொழிலாளர்கள் வழமை போன்று சேவையில் ஈடுபட்டனர்.
அரசாங்கத்தினால் கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட 750 ரூபா படி தமக்கு இதுவரை வழங்கப்படாததால் அதனை வழங்குமாறு பல முறை கோரியும் நகரசபை நிர்வாகம் வழங்க தவறியுள்ளது. இதனைக் கண்டித்தே இந்த அடையாள வேலை நிறுத்தம் செய்ய தொழிலாளர்கள் தீர்மானித்ததாக சங்கத்தின் தலைவர் காளி காசிநாதன் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை தம்மைத் தொடர்பு கொண்ட பதில் நகர சபை தலைவர் க.செல்வராஜா, நகர சபை செயலாளர் ஆகியோர் இம்மாத சம்பளத்துடன் இத்தொகை வழங்கப்படும் எனவும், நிலுவைகள் பகுதி பகுதியாக வழங்கி வைக்கப்படும் என தெரிவித்ததால் போராட்டத்தை கைவிட்டதாக அவர் தெரிவித்தார்.
திருகோணமலை நகர சபையில் 135 சுகாதார தொழிலாளர்களும். 100க்கும் அதிகமான ஏனைய தொழிலாளர்களும் சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026