2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

விக்கிரகங்கள் சேதமாக்கப்படுவது குறித்து விசாரணை

Super User   / 2010 செப்டெம்பர் 11 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ். குமார்)

திருகோணமலை தம்பலகாமம் பிரதேசத்தில்  கடந்த சில தினங்களில் இந்து ஆலயங்கள் சிலவற்றின் விக்கிரகங்கள் இனந்தெரியாதவர்களால் சிதைக்கப்பட்டுள்ளன. இது விடயமாக தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளிமேடு மாரியம்மன் ஆலயம்   நாகதம்பிரான் விக்கிரகம் தலைப்பகுதி சேதமாக்கப்பட்டிருப்பதையும் , ஆதிகோணைநாதர் ஆலயம் வைரவர் வாகனத்தின் தலைப்புகுதி சேதமாக்கப்பட்டிருப்பதையும் புட்டிமேடு சிந்தாமணிப்பிள்ளையார்  வைரவர் சூலாயுதம் அகற்றப்பட்டிருப்பதையும் படங்களில் காணலாம்.

கடந்த சில தினங்களாக இனந்தெரியாவர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் இச்சம்பவங்கள் குறித்து தாம் விசாரணை நடத்தி வருவதாகவும் ஆலயங்களை கண்காணித்து வருவதாகவும் தம்பலமாகம் பொலிஸார் தெரிவித்தனர்.


 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .