Super User / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருமலை - மூதூர் வீதியில் உப்பாறு எனும் இடத்தில் சேவையில் ஈடுபட்ட 'படகுப்பாதையின்' இயந்திரம் பழுதடைந்து கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டபோது அதில் பயணம் செய்த பயணிகளில் 22 பேர் கடலில் பாய்ந்த நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டனர். இன்று காலை 11. 30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இயந்திரம் பழுதடைந்து கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட இப்படகுப்பாதை ,கடலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மின்கம்பமொன்றுடன் மோதியதால் மின்சார வயர் அறுந்து விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கப்போகிறது எண்ணி அச்சமடைந்த பயணிகள் 22 பேர் கடலில் குதித்தனர்.
கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த அப்பயணிகள் அனைவரையும் கடற்படையினர் விரைந்துவந்து காப்பாற்றினர். இச்சம்பவம் இடம்பெற்றவேளை படகுப்பாதையில் சுமார் 70 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது படகு மீட்கப்பட்டு பழுதுபார்க்கப்படுகிறது.
5 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
25 Oct 2025