2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வககையிலான வீதி நாடகங்கள் அரங்கேற்றம்

Super User   / 2010 நவம்பர் 05 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் உள்ளூராட்சி திணைக்களத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில்  குச்சவெளி, தம்பலகாமம், கிண்ணியா. சேருவில, ஈச்சிலம்பற்று, ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீதி நாடகங்களை அரங்கேற்றப்பட உள்ளனர்.

07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு நிலாவெளி தமிழ் மகா வித்தியாலய சந்தியிலும், பிற்பகல் 2.00 மணிக்கு தம்பலகாமம் முள்ளிப்பொத்தாணை சந்தியிலும், மாலை 4.00 மணிக்கு கிண்ணியா குட்டிக்கராச்சி சந்தியிலும்,  08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு ஈச்சிலம்பற்றிலும், பிற்பகல் 2.00 மணிக்கு சேருவில பொதுச்சந்தை முன்பாகவும் இந்நாடகங்கள் அரங்கேற்றப்பட உள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .