2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியை மக்கள் நம்புகின்றனர்: நஜீப் ஏ.மஜீத்

A.P.Mathan   / 2011 மார்ச் 24 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

ஜனாதிபதியின் மீதும், அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்தே மக்கள் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளனரென மூதூர் தொகுதி சுதந்திரக்கட்சி அமைப்பாளரும், முன்னாள் அமைச்சரும், திருகோணமலை மாவட்ட ஜனாதியின் இணைப்பாளருமான நஜீப் ஏ.மஜீத் தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்:-

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் தொகுதியிலுள்ள ஒரு நகர சபையும், 03 பிரதேச சபையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி கொண்டது.
சென்றமுறை ஐக்கிய தேசியக் கட்சி வசமிருந்த கிண்ணியா நகரசபை மற்றும் கிண்ணியா பிரதேச சபையும், அதேபோன்று சுயேட்சை குழு வசமிருந்த மூதூர் பிரதேச சபையும், மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வசமிருந்த தம்பலகாமம் பிரதேச சபையும் இம்முறை 4 உள்ளூராட்சி மன்றங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி கொண்டதற்கான காரணம் மக்கள் இன்னும் ஜனாதிபதியின் மீதும், அரசாங்கத்தின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையே. அத்துடன் 4 சபைகளிலும் குறிப்பாக சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிட்டோர் அதிகமானோர் வெற்றி பெற்றுள்ளதாகவும் நஜீப் ஏ.மஜீத் தெரிவித்தார்;.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .