2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

வெற்றியை அமைதியாக கொண்டாட வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 25 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (எம்.பரீட்)

தம்பலகாமம் பிரதேசசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற எஸ்.எம்.சுபியான் தமது ஆதரவாளர்களிடம் வெற்றியை அமைதியாக கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெற்றி பெற்ற சுபியானை  வரவேற்கும் நிகழ்வொன்று நேற்று வியாழக்கிழமை முள்ளிப்பொத்தானை சிறாஜ் நகரில் நடைபெற்றது.

இதன்போது அவர்  கன்னி உரையாற்றுகையில்,

தேர்தலில் வெற்றி; பெற்றமைக்கு நாம் முதலில் இறைவனுக்கு நன்றி; தெரிவித்துக்கொள்வதுடன்,  தேர்தலில் பல்வேறு வகையிலும் என்னோடு பாடுபட்டு உழைத்த மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்துடன் இவ் வெற்றியை கொண்டாடுவதுடன் மாற்றுக் கட்சியினர்களின் மனதைப் புண்படுத்தாத வகையில் நடந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .