2021 ஜூலை 29, வியாழக்கிழமை

மொறவெவ பிரதேச செயலகத்தில் சமூக சேவை அதிகாரி இல்லாமையினால் மக்கள் சிரமம்

Super User   / 2011 மார்ச் 27 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்)

திருகோணமலை மொறவெவ பிரதேச செயலகத்தில் சமூக சேவை அதிகாரி ஒருவர் இல்லாமையினால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாவதாக தெரிவிக்கப்படுகின்றது.

8,500 மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வரும் இப்பகுதியில் சமூக சேவை அதிகாரி இல்லாமையினால் ஓய்வூதிய விடயங்களில் தாமதம் ஏற்படுவதையும் அங்குள்ள முதியோர்களுக்கான முதியோர் அடையாள அட்டை போன்ற பல சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மொறவெவ பிரதேச செயலாளரை கேட்ட போது,

குறித்த பதவிக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லையென்றும் அது தொடர்பாக திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் சமூக சேவைகள் திணைக்கள நிர்வாக உத்தியோகத்தரை வினவியபோது,

மொறவௌ பகுதிக்கு சமூக சேவை அதிகாரி இல்லாமையினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .