2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

கிண்ணியா பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களை மதீப்பீடு செய்ய விசேட குழு

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா கல்வி வலயத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்கள் மற்றும் பணியாளர்களை மதிப்பீடு செய்து சிபார்சு செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழு முள்ளிப்பொத்தானை, குறிஞ்சாக் கேணி, கிண்ணியா கல்விக் கோட்டங்களுக்கும் மற்றும் கிண்ணியா மத்திய கல்லூரி, கிண்ணியா கல்வி வலய காரியாலயம் என பிரிக்கப்பட்டு நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கான வெள்ள நிவாரண முற்பணக் கொடுப்பனவு பெறுவதற்கு உண்மையாக பாதிக்கப்பட்ட அரச ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டுமல்லாது இதில் பாதிக்கப்படாத ஏனையவர்களில் அதிகமானோhர் இக்கொடுப்பனவைப் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு வழங்கப்பட்ட நிதி போதாததால் கிழக்கு மாகாண தலைமைச் செயலாளரின் பணிப்புரைக்கமைய வெள்ள நிவாரண முற் கொடுப்பனவு பெறுவதற்கு முன்னர் கிராமசேவகர் மற்றும் பிரதேச செயலாளர் பரிந்துரைக்கமைய ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீள் பரிசீலனை செய்வதற்காக உரியவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதனை மீள் பரிசிலனை செய்து மீண்டும் சமர்ப்பிக்கப்படும் இவ்விண்ணப்பங்களை இக்குழு பரிசீலனை செய்து பரிந்துரைக்கவுள்ளதாக கிண்ணியா வலயக் கல்விப்பணிப்;பாளர் யு.எல்.எம்.ஹாசீம் தெரிவித்தார்.


  Comments - 0

  • zuhair ali Wednesday, 06 April 2011 05:46 AM

    நல்ல விடயம்தான் என்றாலும் அரச ஊழியர்களுக்கு அரசுதான் மாதா மாதம் சம்பளம் கொடுக்கின்றதே எத்தனையோ வேலையில்லா பட்டதாரிகள்,பாமரர்கள் இருக்கின்றனர் அப்போது ஏன் அவர்களுக்கு ஒதுக்கீடு அல்லது நிவாரணம் கொடுப்பது குறைவு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .