2021 மே 13, வியாழக்கிழமை

ஆதினகுடி தலைவருடன் முதலமைச்சர் சந்திரகாந்தன் சந்திப்பு

Menaka Mookandi   / 2011 ஜூன் 22 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

இலங்கையின் ஆதினகுடி மக்களின் தெஹியத்தகண்டி தலைவர் தலவர்க்கயே குணபண்டா, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை இன்று புதன்கிழமை காலை அவரது திருமலை வாசஸ்த்தலத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

தெஹியத்தகண்டி பிரதேசத்தில் வாழ்கின்ற தாம் குறிப்பிட்ட சில பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும். அது தொடர்பில் முதலமைச்சருக்கு தெரியப்படுத்தி தங்களுக்கான உதவிகளை பெற்றுக்கொள்வதற்காவே தாம் இச்சந்திப்பை மேற்கொண்டதாவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், தங்களது பிரதேசத்துக்கு அடுத்த வாரம் வருகை தருவதாக தெரிவித்த முதலமைச்சர் சந்திகாந்தன், பிரதேசத்தைப் பார்வையிட்டு குறிப்பிட்ட சில உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .