2021 மே 13, வியாழக்கிழமை

மனித உரிமை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 17 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்டத்தின் கும்புறுபிட்டி கிராம மக்களுக்கு இன்று வியாழக்கிழமை மனித உரிமை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு வளவாளராக திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழுவிலிருந்து திருமதி மதியாபரணம் அவர்கள் கலந்து கொண்டார். இக்கருத்தரங்கில் அடிப்படை உரிமைகள், சிறுவர் உரிமைகள், பெண்கள் உரிமை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்நிகழ்வினை எகெட் கரித்தாஸ் மனித உரிமை பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் எகெட் கரித்தாஸ் மனித உரிமை பிரிவின் இணைப்பாளர் செல்வி க. சூரியகுமாரி, கும்புறுபிட்டி பாடசாலை அதிபர் ஐயாமுத்து ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வளவாளர் கூறுகையில் சமூகத்தில் சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் இதற்கு பொறுப்பானவர்கள் பெற்றோர்கள் அத்துடன் பிள்ளைகளின் உரிமைகள், கடமைகள் என்ன? பெற்றோரின் பொறுப்புகள், கடமைகள் என்ன என்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .