2025 மே 16, வெள்ளிக்கிழமை

அபிவிருத்திக் கூட்டங்களுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரை சமூகமளிக்குமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 31 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்லது அவரது உத்தியோகபூர்வ அதிகாரி சமூகம் அளிக்க  வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் வேண்டுகோள் விடுத்தார்.

மூதூர் பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம், அப்பிரதேச செயலகத்தில் இன்று (31)  நடைபெற்றது.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் முதலமைச்சர் சார்ந்த அமைச்சுகள் மற்றும் திணைக்களங்கள் தொடர்பான விடயங்களை ஆராயும்போது, அவை தொடர்பில்  கருத்துகளை முன்வைக்கவோ, பதில் அளிப்பதற்கோ பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இல்லாத நிலையில்; அவற்றை ஆராய முடியாத நிலைமை காணப்படுகின்றது' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .