2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அரச நெல் கொள்வனவு குறித்த விசேட கலந்துரையாடல்

Freelancer   / 2023 பெப்ரவரி 21 , பி.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

அரச நெல் கொள்வனவு தொடர்பான விசேட கலந்துரையாடல், திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் பி. எச். என் .ஜயவிக்கிரம தலைமையில் இன்று (21)  நடைபெற்றது .

அரச நெல் கொள்வனவு தொடர்பாக தற்பொழுது இரண்டு சுற்றுநிரூபங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் மாவட்டத்தில் நெல் கொள்வனவு தொடர்பான பொறிமுறையை எவ்வாறு மேற்கொள்வது தொடர்பான விளக்கம் மாவட்டச் செயலாளரால், பிரதேச செயலாளர் உள்ளிட்ட துறை சார் திணைக்கள தலைவர்களுக்கு இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

2022/23 பெரும் போகத்தில் கிடைக்கப்பெற்ற நெல்லை விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளுகின்ற வேலை திட்டத்தின் கீழ், பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பு மூலம் தெரிவு செய்யப்பட்ட சிறிய, நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் மூலமாக நெல் கொள்வனவு இடம்பெற இருக்கின்றது. 

இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக  அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ். சுதாகரன், மாவட்ட செயலகத் திட்டமிடல் பணிப்பாளர் கே. விஜயதாசன், திணைக்களத் தலைவர்கள் மற்றும் துறை சார் உத்தியோத்தர்கள் கலந்துகொண்டனர். (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .