Editorial / 2022 ஏப்ரல் 24 , பி.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்
லங்கா சதொச நிறுவனத்தின் ஊடாக சலுகை விலையில் அரிசி விநியோகிக்கப்படும் என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அங்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
திருகோணமலையில் அமைந்துள்ள லங்கா சதொச நிறுவனத்தில் வெள்ளி, சனிக் கிழமைகளில், காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தே மக்கள் அரிசியை கொள்வனவு செய்தனர்.
அவ்வாறு அரிசி கொள்வனவு செய்யப்படும் போது பல நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஒருவருக்கு மூன்று வகையான அரிசி வகைகளில் ஐந்து கிலோ கிராம் வீதம் அரிசி விநியோகிக்கப்படுகின்றது. அவ்வாறு அரிசியை கொள்வனவு செய்யும் முன்னர், 10 ரூபாய் பெருமதியான பை ஒன்றையும் கொள்வனவு செய்ய வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அரிசியை கொள்வனவு செய்ததன் பின்னர், வேறு பொருட்களும் கட்டாயமாக கொள்வனவு செய்யப்படல் வேண்டும் எனவும் கட்டாயப்படுத்துவதாகவும் வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
லங்கா சதொச நிறுவனத்தில் மட்டுமன்றி ஏனைய வர்த்தக நிலையங்களிலும். பொருட்களை கொள்வனவு செய்ததன் பின்னர், வேறு சில பொருட்களை வாங்குமாறு வர்த்தகர்கள் கட்டாயப்படுத்துவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுக்கின்றனர்.
அரச நிறுவனமொன்றில், இடம்பெறும் இவ்வாறான முறைக்கேடுகள் தொடர்பில், அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர் என்றும் நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025