Niroshini / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் 2016ஆம் வருட பாதீட்டில் உள்ள குறைகளைக் கண்டித்து போராட்டங்களை நாடு தழுவிய ரீதியில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக சங்கத்தின் நிர்வாகிகள் மாவட்டம் தோறும் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இக்கூட்டம் நேற்று சனிக்கிழமையும் இன்று ஞாயிற்றுக்கிழமையும் சகல மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்துக்கான கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை தபால் நிலைய வீதியில் உள்ள குளக்கோட்டன் மாநாட்டு மண்டபத்தில் திருகோணமலை மாவட்ட கிளையின் தலைவர் ஜே.வேர்ஜினோ (இலங்கை வங்கி) தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேசிய சங்கத்தின் செயலாளர் ஏ.கே.பண்டார (மக்கள் வங்கி) , இலங்கை வங்கி தலைவரின் இணைப்பாளர் எஸ்.அமிர்தலிங்கம், மற்றும் செயற்குழு உறுப்பினர் பி.ஜி.டபிள்யூ அதுளகுமார (கிராம அபிவிருத்தி வங்கி), திருகோணமலை கிளையின் செயலாளர் எஸ்.பிரமேந்திரன் (மக்கள் வங்கி) ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
2016ஆம் வருடம் பாதீட்டில் 259, 260, 263, 268, 273, 275, 448, 549, 550. 551, ஆகிய சரத்துக்கள் வங்கிகளுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் பாதகமாக அயை உள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
எதிர்வரும் புதன்கிழமை (09)மதியம் நாடு தழுவிய ரீதியில் ஒரு மணிநேரம் பணிநிறுத்தல் போராட்டத்தினையும், 15ஆம் திகதி ஒரு நாள் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தையும் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.

20 minute ago
40 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
40 minute ago
48 minute ago
1 hours ago