Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 மே 04 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமமையில் இலங்கை மத்திய வங்கியும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நடத்திய இளைஞர்களுக்கான நிதியியல் நிபுணத்துவம் சம்பந்தமான செயலமர்வு, திருகோணமலை நகர சபையின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை (04) நடைபெற்றது.
இளைஞர் சேவைகள் மன்றத்தின் திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஆர்.ரவிக்குமார் தலைமையில் இச்செயலமர்வு நடைபெற்றது.
நிதியினை எவ்வாறு கையாள்வது? வங்கிகளின் நடைமுறைகள் செயற்பாடுகள், பணப்புழக்கம் எவ்வாறு ஏற்படுகின்றது? போன்ற விடயங்கள் தெளிவு படுத்தப்பட்டது.
இதில் 120 இளைஞர் மற்றும் யுவதிகள் பங்குபற்றியிருந்தார்கள்.
இச்செயலமர்வில் இலங்கை மத்திய வங்கியின் குழுத் தலைவர் ஸ்ரீ பத்மநாதன், ஆர்.டி.பி. வங்கியின் அதிகாரி ஜே.கரிகரன், திருகோணமலை சிறைச்சாலை அதிகாரி கே.பிரசாத் மற்றும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஆர். ரவிக்குமார், நிஸ்கோ முகாமையாளர் ஜெயசுந்தர உட்பட பலரும் கலந்துகொண்டார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .