2025 மே 05, திங்கட்கிழமை

உள் வீதியைச் செப்பனிடுமாறு கோரிக்கை

எப். முபாரக்   / 2018 ஒக்டோபர் 30 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேராறு சஹிது உள் வீதி, நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமையால், போக்குவரத்துச் செய்வதில் பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வீதியைத் தினமும் சுமார் இருபது குடும்பங்கள் பயன்படுத்துகின்றன. அத்துடன், இவ்வீதியால் பாடசாலை செல்லும் சிறுவர்கள், பல துயரங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கின்றனர்.

எனவே, இவ்வீதியை கூடிய விரைவில் கிரவல் இட்டு, செப்பனிட்டுத் தருமாறு, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X