2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

ஊடகவியலாளர் ராஜ்குமாருக்கு விருது

தீஷான் அஹமட்   / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 04:18 - 1     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் நடத்தப்படும், கிழக்கு மாகாண இலக்கிய விழா 2018இன் இளங்கலைஞர் பாராட்டும் ஊடகத்துறை விருதுக்கு, திருகோணமலை ஊடகவியலாளர் வடமலை ராஜ்குமார் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இவர், ஊடகவியலாளராகவும் எழுத்தாளராகவும் சமூகப் பணியாளராககவும் பல்வேறு துறைகளில் செயற்பட்டு வருகின்றார்.

திருகோணமலை மாவட்டத்தில் மூவின ஊடகவியலாளர்களையும் கொண்ட மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தில் 2015ஆம் ஆண்டில் தலைவராகவும், 2016ஆம் ஆண்டில் செயற்குழு உறுப்பினராகவும், 2017ஆம் ஆண்டில் பொருளாளராகவும் செயற்பட்டதுடன், 2018ஆம் ஆண்டில், செயற்குழு உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார்.

2013ஆம் ஆண்டு, திருகோணமலை நகர சபையால் கிடைக்கப்பெற்ற தனித்துவச் செய்தியாளருக்கான நகர சபைத் தவிசாளர் விருது உட்பட பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

மேலும், திருகோணமலை மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் சமூக மற்றும் அரசியல் ரீதியான பிரச்சினைகளை மய்யமாக வைத்து, வாராந்தப் பத்திரிகைகளுக்கு கட்டுரைகளை எழுதி வருகின்றார். அக்கட்டுரைகளின் தொகுப்பு அடங்கிய நூல் ஒன்றையும், “அல்லல் அறுப்போம்” என்ற பெயரில் 2017ஆம் ஆண்டு இவர் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 1

  • தர்மசேகரம் கலைக்குமார் Wednesday, 24 October 2018 06:32 AM

    உண்மையாக சமூகம் சார்ந்த பிரச்சினைகளை வெளியிடுபவர் என்ற வகையில் மேற்படி விருதுக்குத் தகுதியானவர்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X