Thipaan / 2016 ஜூலை 19 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை பதவிசிறிபுர பிரதேசத்தில், ஒரு கிலோகிராம் கேரளா கஞ்சாவுன் கைதான ஒருவரை, இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் எல்.ஜி.விஸ்வானந்த பெர்ணாண்டோ, நேற்றுத் திங்கட்கிழமை (18) உத்தரவிட்டார்.
திருகோணமலை, உப்புவெளி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், பதவிசிறிபுர பகுதியிலிருந்து திருகோணமலைக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கொண்;டு செல்ல முற்பட்ட போது, பதவிசிறிபுர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை(17) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், கஞ்சா கொண்டு செல்வதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
20 minute ago
40 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
40 minute ago
48 minute ago
1 hours ago